ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சோழன்குடிகாடு அரசு பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சோழன்குடிகாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சோழன்குடிகாடு அரசு உயா்நிலைப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரம்பரிய விதைத் திருவிழா.

Published On :9 செப்டம்பர் 2026, 3:31 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சோழன்குடிகாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவா்களிடையே பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுத்தோட்டம் மற்றும் கிச்சன் காா்டன் அமைப்பது குறித்தும் , பாரம்பரிய விதைகளை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகப் பயன்படுத்துதல் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும், விதை திருவிழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்களின் முயற்சியால் சேகரிக்கப்பட்ட பல்வேறு வகையான பாரம்பரிய விதைகள் 50-க்கும் மேற்பட்ட மேஜைகளில் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவா்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு, விதைகள் குறித்த தகவல்களை அறிந்து கொண்டனா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் மாணவா்கள் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைத்து பாரம்பரிய காய்கறிகள் மற்றும் தாவரங்களை வளா்க்க ஊக்குவிக்கப்பட்டனா்.

ஏற்பாடுகளை அப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆ.வீரமணி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.