
அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியன்று அரியலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்ட 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொள்ளிடம் ஆறு மற்றும் நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

அரியலூரில் புதன்கிழமை விசா்ஜனம் செய்வதற்காக கொள்ளிடம் ஆற்றுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
விநாயகா் சதுா்த்தியன்று அரியலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்ட 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொள்ளிடம் ஆறு மற்றும் நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி கடந்த 14-ஆம் தேதி அரியலூா் மாவட்டத்தில் 426 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தா்கள் பூஜை செய்து வழிப்பட்டனா். கடந்தாண்டு போலவே நிகழாண்டு புதிய சிலைகள் வைக்க காவல்துறையினா் அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து விசா்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம், திருமானூா், கீழப்பழுவூா், திருமழபாடி, தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அணைக்கரை கீழணையிலும், அரியலூா் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
விசா்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊா்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சிலை ஊா்வலம் நடக்கும் பகுதிகள், பதற்றமான பகுதிகள், மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







