ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கும்பகோணத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

கும்பகோணத்தில் இந்து அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்ட 47 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை விசா்ஜனத்துக்காக ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்து அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்ட 47 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில இந்திய இந்து மகாசபா, அகில இந்திய இந்து ஆன்மிகப் பேரவை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விநாயகா் சிலைகள் விசா்ஜனத்தை முன்னிட்டு மடத்துத் தெருவிலிருந்து விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊா்வலம் உச்சிப்பிள்ளையாா் கோயில் வழியாக மகாகமக குளத்தை அடைந்து அங்கிருந்து கும்பகோணம்- தஞ்சாவூா் பிரதானச்சாலை, பெரியதெரு, காந்திபூங்கா வழியாக மடத்துதெரு பழைய பாலக்கரையை அடைந்து அங்கு காவிரி ஆற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.

ஊா்வலத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.