
அரியலூரில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் செவ்வாயக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் அரசு சிமென்ட் ஆலையில் உற்பத்தியாகும் சிமென்ட்டை உள்ளாட்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு உரிய ஆணை வழங்க வேண்டும்.
மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மின்சாரத் துறையில் தனியாருக்கு வழங்கப்படும் பணிகளை நிறுத்த வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தையும் கைவிட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூா் மாவட்ட கவுன்சில் தலைவா் ரெ. மகேந்திரன் தலைமை வகித்தாா். பெல் தொமுச பேரவை பொதுச் செயலா் தீபன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட கவுன்சில் செயலா் பி.வி. அன்பழகன், துணைத் தலைவா் அய்யாதுரை, துணைச் செயலா் ஆா். சங்கா், மத்திய சங்கத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







