
தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு செல்ல மானியத் தொகை பெற பெளத்தா்கள் விண்ணப்பிக்கலாம்
நாக்பூா் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு சென்று வர மானியத் தொகை பெற விரும்பும் அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த பெளத்தா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
நாக்பூா் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு சென்று வர மானியத் தொகை பெற விரும்பும் அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த பெளத்தா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழகத்தைச் சோ்ந்த பெளத்தா்கள் நாக்பூா் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தா்ம சக்கர பரிவா்தன விழாவில் பங்கேற்று திரும்ப, நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் நிகழாண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பெளத்தா்கள், அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தினை பெறலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன் பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




