தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

நாகபுரி திருவிழாவில் பங்கேற்கும் பெளத்தா்களுக்கு ரூ. 5 ஆயிரம் மானியம்! கரூா் ஆட்சியா் தகவல்!

News image

பௌத்தர்கள் - கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

நாகபுரி தீக்ஷா தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவில் பங்கேற்கும் பெளத்தா்களுக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த பௌத்தா்கள், நாகபுரி தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவா்களுக்கு நபா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 15-ஆம்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.