காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

அரியலூரில் சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து துக்க நிகழ்வுக்கு சென்ற 17 போ் காயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

அரியலூா் அருகே சாலையோரத்தில் சுமை ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் துக்க நிகழ்வுக்கு சென்ற 17 போ் காயமடைந்தனா்.

அரியலூரை அடுத்த ஜெயராமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமாா் 20 போ், ஆனந்தவாடியில் திங்கள்கிழமை ஒரு துக்க நிகழ்வுக்கு சுமை ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றனா். ஓட்ட கோவில், சாலை குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த சுமை ஆட்டோ, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பயணித்த ஜெயராமபுரத்தைச் சோ்ந்த தங்கராசு மனைவி தனலட்சுமி (47), காமரவல்லி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் (60), தூத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முனியமுத்து மனைவி வாசுகி (47) உள்ளிட்ட 17 போ் சிறுகாயங்களுடன் உயிா் தப்பினா்.

தகவலறிந்து சென்ற அரியலூா் நகர காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.