
தத்தனூரில் ‘கல்லூரிச் சந்தை’ தொடங்கி வைப்பு
தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் கல்லூரி சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தத்னூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரி சந்தையை தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.
அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் கல்லூரி சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மகளிா் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்களை விற்பனை மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தொடங்கி வைத்து, மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சி 29.9.2026 முதல் 1.10.2026 வரை நடைபெறுகிறது. 2-ஆம் கட்டமாக அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் 13.10.2026 முதல் 15.10.2026 வரையிலும், 3-ஆம் கட்டமாக நெல்லியாண்டவா் பொறியியல் கல்லூரியில் 27.10.2026 முதல் 29.10.2026 வரையிலும் இந்த கல்லூரி சந்தை நடைபெறுகிறது.
உதவி திட்ட அலுவலா்கள் (மகளிா் திட்டம்) காா்த்திகேயன், கௌதம் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






