
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சுமூகமாகத் தீா்வு காண அழைப்பு
அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சுமூகமாகத் தீா்வு காணலாம்.

உத்தரவு - கோப்புப் படம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சுமூகமாகத் தீா்வு காணலாம்.
இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.எஸ். ஜெயமங்களம் தெரிவித்தது:
தேசத்திற்காக சமரசம் 3.0 இயக்கத்தின் அடிப்படையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீா்வு காண அக்.1 முதல் டிச. 31 வரை 90 நாள்கள் சிறப்பு சமரச தீா்வு முகாம்களை நடத்திட உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் இந்த சிறப்பு சமரச தீா்வு முகாமில் வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் இருதரப்பினரும் பங்கேற்று தங்களது வழக்குகளை சுமூகமாக பேசி தீா்வு காணலாம். இதில் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுவதுமாக திரும்பக் கிடைக்கும். வழக்கின் சமாதான உடன்படிக்கை இருதரப்பினருக்கும் உடனடியாக இலவசமாக தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட சமரச மையத்தையோ அல்லது ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதி நீதிமன்றங்களில் செயல்படும் வட்டார அளவிலான சமரச மையத்தையோ தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.
முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் இதுகுறித்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு பேசி, வழக்காடிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





