நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

க.பரமத்தி ஒன்றியத்தில் 138 பசுமை வீடுகள்

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 138 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவது குறித்த விளக்கக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:42 am IST

கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 138 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டுவது குறித்த விளக்கக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசியது:

பசுமை வீடு திட்டத்திற்கு கடந்தாண்டு ரூ. 1.8 லட்சம் வழங்கப்பட்டது. இது தற்போது உயர்த்தப்பட்டு ரூ. 2.1 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் க. பரமத்தி ஒன்றியத்தில் 138 வீடுகள் கட்டப்பட உள்ளன. வீடு கட்டும் பணியை தொடங்கியோருக்கு வீடு கட்டத் தேவையான மணல் குறைந்த விலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.

பயனாளிகள் அதற்கான ஒப்புகைச் சீட்டை ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.  பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு முடிந்தவரை முன் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும். பூச்சு வேலைகளில் பூ அலங்கார வேலைகளைத் தவிர்ப்பது பணிகளை விரைந்து முடிக்க உதவும். பயனாளிகள் தவறாமல் கழிப்பறை மற்றும் மோல்டு கூரை மேல் தட்டு ஓடு பதிப்பது மிக அவசியம் என்றார்.  ஒன்றியப் பொறியாளர் சங்கர், ஊராட்சிகள் ஆணையர் வீரமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு வீடு கட்ட விளக்கக் கையேடும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.