இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மே 15-ல் மு.க. ஸ்டாலின் வருகை

மே 15, 16-களில் கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Updated On :13 மே 2013, 1:40 am IST

மே 15, 16-களில் கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதுகுறித்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மே 15-ம் தேதி மாலை கரூர் நகராட்சி அலுவலகம் அருகில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  மு.க. ஸ்டாலின்  கலந்து கொள்கிறார். மே 16-ம் தேதி முன்னாள் மாவட்டச் செயலர் வாசுகி முருகேசன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி மே 15-ம் தேதி காலை 10.30 கரூருக்கு வரும் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் திருச்சி புறவழிச்சாலையில், கட்டளை பிரிவு சாலை அருகே 500 இரு சக்கர வாகனங்களில் திமுக இளைஞர் அணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.