ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

கல்லூரிப் பேருந்து, மினி பேருந்து மோதல்: 8 பேர் காயம்

குளித்தலையில் கல்லூரிப் பேருந்து மீது மினி பேருந்து மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

Published On :

குளித்தலையில் கல்லூரிப் பேருந்து மீது மினி பேருந்து மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தனியார் கல்லூரிப் பேருந்து குளித்தலை நோக்கி திங்கள்கிழமை காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பேருந்து குளித்தலை தந்தை பெரியார் பாலம் அருகே

வந்தபோது பேருந்தின் பின்னால் வந்த மினி பேருந்து திடீரென தனியார் கல்லூரி பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த முசிறி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் உள்பட 8 பேர் லேசான காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றுச் சென்றுவிட்டனர். கல்லூரிப் பேருந்தில் வந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.