கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்டம் வழங்கல் அலுவலகம் சார்பாக 10
பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறையில் பணிகள் விரைவாக நடைபெறும் வகையில் அரசு உத்தரவுபடி, ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் மற்றும் சார் ஆய்வாளர் ஆகிய
இருவருக்கு தாற்காலிக பணி நியமன ஆணைகளையும், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் மூவருக்கு தலா ரூ.30,000-க்கான காசோலையை நிவாரண உதவியாகவும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி பயனாளி ஒருவர் மனு செய்தவுடனேயே உடனடி தீர்வாக ஊன்றுகோல் மற்றும் கருப்புகண்ணாடியையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ், நில அளவைப் பிரிவு உதவி இயக்குநர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

