ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தாது உப்புச் சத்து குறைந்தால் கால்நடைகளுக்கு சினை பிடிக்காது

தாது உப்புச்சத்து குறைந்தால் கால்நடைகளுக்கு சினைப்பிடிக்காது என்றார் சின்னாதாராபுரம் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ்.

Updated On :

தாது உப்புச்சத்து குறைந்தால் கால்நடைகளுக்கு சினைப்பிடிக்காது என்றார் சின்னாதாராபுரம் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ்.

கரூர் அருகே ராஜபுரம் ஊராட்சியில் எலவனூர் கால்நடை மருந்தகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட மருத்துவ முகாமுக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசுகையில், க. பரமத்தி ஒன்றியப் பகுதியில் போதிய மழை இல்லாததால் கால்நடை வளர்ப்பதையே இப்பகுதி விவசாயிகள் தொழிலாகச் செய்கின்றனர்.

மாடுகள் கன்று ஈன்ற பிறகு மூன்று முறை பருவநிலைக்கு வந்து சினை ஊசி போட்டும் அல்லது காளையுடன் சேர்த்து விட்ட பின்பும் சினை பிடிக்காமல் இருந்தால் அவை மலட்டுதன்மை மாடுகளாகக் கருதப்படுகின்றன.

எனவே பாதிக்கப்பட்ட கால்நடைகளை அருகேயுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரின் உரிய ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

பெரும்பாலும் மாடுகளுக்கு தாது உப்புச் சத்து பற்றாக்குறைவால்தான் சினை தாமதமாகிறது. எனவே இதற்கு அரசு கால்நடை மருந்தகங்களைத் தொடர்பு கொண்டு அங்கு குறைபாடுள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் தாது உப்பு கலவையை மருத்துவரின் ஆலோசனைப்படி அன்றாடம் ஒரு மாதத்துக்கு மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் மலட்டுத் தன்மையை எளிதில் நீக்கலாம்.

தற்போது கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக வழங்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பசு, எருமைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

முகாமில் பண்ணையாளர்கள் அனைவரும் தங்கள் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசியை முன்னெச்சரிக்கையாக போட்டு கால்நடைகளை பாதுகாத்திட வேண்டும். ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் மீண்டும் போட வேண்டியது அவசியம் என்றார்.

முன்னதாக கால்நடை ஆய்வாளர் ஜானகி வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் கலையரசி முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி முகாமை தொடங்கி வைத்து சிறந்த கலப்பின கிடாரிகள் வளர்த்த விவசாயிகள் 4 பேருக்கு பரிசு வழங்கினார்.

முகாமில் கால்நடை ஆய்வாளர் ஜானகி, மருத்துவ உதவியாளர்கள் மரியஉபகாரம், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று 350 பசுமாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சிறந்த கலப்பின கிடாரிகள் வளர்த்த விவசாயிகள் 4 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.