தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்துகளில் 2 பேர் சாவு

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் இறந்தனர்.

Updated On :

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவர் இறந்தனர்.

திருச்செங்கோட்டிலிருந்து போர்வெல் துளையிடும் டிராக்டர் ஒன்று தேனி சென்று கொண்டிருந்தது.

தர்மபுரி மாவட்டம், பெரியகண்டியூரைச் சேர்ந்த சின்னகோவிந்தன் மகன் சக்திவேல் (40) அதை ஓட்டிச் சென்றார்.

சட்டீஷ்கர் மாநிலம் அமராக் பகுதியை சேர்ந்த கஜராம் மகன் சிதாவன் (20) கிளீனராகச் சென்றார்.

கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த மேட்டுப்பட்டிப் பிரிவு அருகே டிராக்டர் சென்றபோது, பெங்களூருவிலிருந்து தேனி சென்ற ஆம்னி பேருந்து அதன் மீது மோதி டிராக்டர் கிளீனர் சிதாவன் (20) சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அரவக்குறிச்சி போலீஸார்   பஸ் ஓட்டுநர் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்துவை (51) கைது செய்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு விபத்து: வேடசந்தூர் கோம்பையைச் சேர்ந்த அழகர்சாமி (47). இவரது நண்பர் சின்னச்சாமி (50) ஆகியோர் கரூர் - திண்டுக்கல் சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த மேட்டுப்பட்டிப் பிரிவு அருகே சனிக்கிழமை காலை பைக்கில் சென்றனர். 

அப்போது கரூரிலிருந்து தேனிக்கு தனியார் வங்கி அதிகாரியின் குடும்பத்தினர் சென்ற கார்  மோதி  இருவரும் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு  அழகர்சாமி உயிரிழந்தார்.

 மேல் சிகிச்சைக்காக சின்னச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அரவக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் மு. அருணாசலம் வழக்குப் பதிந்து வங்கி அதிகாரியை கைது செய்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.