பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஆண்டு முழுவதும் உழைக்கும் கட்சி அதிமுகவே: நடிகர் ஆனந்தராஜ் பேச்சு

மக்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கட்சி அதிமுகவே என்றார் நடிகர் ஆனந்தராஜ்.

Published On :

மக்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கட்சி அதிமுகவே என்றார் நடிகர் ஆனந்தராஜ்.

கரூர் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சனிக்கிழமை ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் ஒன்றியச் செயலர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் மற்றும் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

"கருணாநிதி மகன் ஆட்டோ ஓட்டுகிறார், ராட்டை சுற்றுகிறார். நடந்து போகிறார். இதையெல்லாம் அவர் துணை முதல்வராக இருந்தபோதே செய்திருக்க வேண்டும். பாஸ்மார்க் வாங்க முடியாத கட்சிகள் எல்லாம், இன்று டாஸ்மாக்கை கையியெடுக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கு முன்னரெல்லாம் தமிழகத்தில் டாஸ்மாக் கடை இல்லாமல் இருந்ததா? இப்போதும் கேரளம், கர்நாடகத்தில் எல்லாம் மதுக்கடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதுதானே. ஆறுமாதம் மட்டும் பணியாற்றக்கூடிய கட்சி அதிமுக அல்ல, ஆண்டு முழுவதும் உழைக்கும் கட்சி. தமிழக முதல்வருக்கு தமிழக மக்களாகிய நீங்கள்தான் குடும்பம் என்றார்.

கரூர் தொகுதிச் செயலர் எஸ். திருவிகா வரவேற்றார். இதில் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி, மாவட்ட துணைச்செயலர் காளியப்பன், பொருளாளர் முரளி, முன்னாள் மாவட்டச் செயலர் சாகுல்அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.