தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மத்திய அரசை கண்டித்துகரூரில் தொழிற்சங்கத்தினர் மார்ச் 10-ல் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து கரூரில் மார்ச் 10-ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து கரூரில் மார்ச் 10-ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம், சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில், தொமுச மாவட்ட செயலர் பழ. அப்பாசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடக் கோரியும், குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.15,000 ஆக நிர்ணயம் செய்ய, முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த,

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் உத்திரவாதப்படுத்த, புதிய சாலைப் போக்குவரத்து மசோதாவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, கரூர் ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் முன் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திடவும், இதில் திரளான தொழிலாளர்களை பங்கேற்கச் செய்வதெனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. முருகேசன், ஐஎன்டியுசி மாநில செயலர் டி.வி. அம்பலவாணன், மாவட்டச் செயலர்கள் ஜி.பி.எஸ். வடிவேலன் (ஏஐடியுசி), எம். பால்ராஜ் (ஏஐசிசிடியு), எஸ். ஆனந்தராஜ் (ஹெச்எம்எஸ்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.