கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் சனிக்கிழமை (அக். 21) நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்டப் பிரிவின் சார்பில் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், வளைகோல்பந்து, கால்பந்து போட்டிகள் வரும் 21-ஆம்தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற இருந்தது.
இந்த போட்டிகள் தற்போது நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.