காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புதன்கிழமை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி கரூரில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மாரப்பன் தலைமையில் புதன்கிழமை நீதிமன்ற பணியைப் புறக்கணிப்பு செய்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து சங்கத் தலைவர் மாரப்பன் கூறியது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் கொண்டு, இத்தகைய செயலில் பாஜக மத்திய அரசு செயல்படுகிறது.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


