காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பிரதமருக்கு ஆசிரியர்கள் சார்பில் 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பப்படும் என்றார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் செ. முத்துச்சாமி.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு மற்றும் ஆசிரியர்கள் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
பிரதமர் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மாநாட்டில் நிறைவேற்றி ஒரு வாரத்திற்குள் 10 லட்சம் அஞ்சல் அட்டைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். போராட்டம் குறித்து விரைவில் மாநிலக் குழுவில் முடிவெடுப்போம். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்தவரை நியமிக்காதையை இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனே அவரை மாற்ற வேண்டும் என கல்வித்துறை சார்பில் வலியுறுத்துகிறோம் என்றார். பேட்டியின்போது, மாநில பொருளாளர் கேபி. ரக்ஷித், துணைத் தலைவர் எம்.ஏ. ராஜா, மாநாட்டுத் தலைவர் வீ. சுந்தரகணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

