பணிபுரியும் இடங்களில் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் மாவட்டத் தலைவர் பெ.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநாட்டுச் செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் பா.பெரியசாமி மாநாட்டு அறிக்கை வாசித்தார். முன்னாள் மாநில பொருளாளர் பெ. இராமசாமி இயக்க கொடியேற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் தேசியக்கொடியேற்றினார். தமிழகத்தில் தொடர்ந்து நீண்ட காலமாக போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை நிவர்த்தி செய்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வழங்கிட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை பெண் ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

