மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மொபெட்டில் இருந்து விழுந்த முதியவர் சாவு

தோகைமலை அருகே மொபெட்டில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:55 am

தோகைமலை அருகே மொபெட்டில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த தனக்கனூரைச் சேர்ந்தவர் கணேசன்(80). இவர் சனிக்கிழமை இரவு  தனது மொபெட்டில் மனைவி பழனியம்மாளுடன்(65) சக்கரக்கோட்டை-பள்ளபட்டி சாலையில் பாப்பனம்பட்டி பகுதியில் சென்றபோது மொபெட் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.