கரூர் அருகே வேன் மோதி தம்பதி சாவு

கரூர் மாவட்டம், புலியூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
Updated on
1 min read

கரூர் மாவட்டம், புலியூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
கரூரை அடுத்த புலியூர் சமத்துவபுரத்தைச்சேர்ந்தவர் லோகநாதன் (45). இவர், புலியூரில் செட்டிநாடு சிமென்ட் ஆலை ஊழியராகப் வேலை பார்த்து வந்தார். 
இவரது மனைவி பானு (39). இவர்களது மகள் வீடு புலியூரில் உள்ளது. இந்நிலையில் தனது மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் கரூர் - திருச்சி சாலையில் கவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் எதிரே வந்த வேன் மோதியதில், தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவலறிந்த பசுபதிபாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com