சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

ஆகஸ்ட் 10-ல் கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை வழிகாட்டல் நிகழ்ச்சி

கரூர் பண்டுதக்காரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு வரும் 10-ம் தேதி கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Updated On :

கரூர் பண்டுதக்காரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு வரும் 10-ம் தேதி கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மையத் தலைவர் முனைவர் பி. வசந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பால் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகளவில் முதலிடம் வகிக்கிறது. அண்மைக்காலங்களில் ஜெர்சி, சிந்தி கலப்பின மாடுகளை தவிர நம்நாட்டு இனங்களான தார்பார்கள், கிர், காங்கேயம், புலிகுளம் போன்றவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த இன மாடுகளில் தேசிய மாட்டின இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மையத்தில் வரும் 10-ம்தேதி நடைபெறுகிறது, 
இதில் கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் காரணிகள்,  மலட்டுத்தன்மையின்  அறிகுறிகள், புதிய மற்றும் நவீன சினை பருவ முறைகள்மற்றும் அவற்றை பயன்படுத்துவதன் அவசியம்,செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. 
இதில் விவசாயிகள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.