பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவன் கொலை: இளைஞர் கைது

க.பரமத்தி அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவனைக் கொலை செய்த இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

க.பரமத்தி அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவனைக் கொலை செய்த இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். 
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பி.விஸ்வநாதபுரி அண்ணாநகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் சிரஞ்சீவி(13). அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிரஞ்சீவி மாலையில் வெகுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர், உடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரித்த போது பள்ளிக்கு வரவில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அதேபகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் பிரதீப்புடன்(19) பார்த்ததாகக் கூறினர். 
இதுகுறித்து பிரதீப்பிடம் கேட்டபோது பார்க்கவே இல்லை எனக் கூறியுள்ளான். அவன் மீது சந்தேகம் கொண்ட விஸ்வநாதன் க.பரமத்தி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் பிரதீப்பிடம் விசாரித்த போது,  ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற சிரஞ்சீவியிடம் விளையாடலாம் எனக் கூறி அங்குள்ள வாய்க்கால் மேட்டுக்கு அழைத்துச் சென்று, ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய போது மறுத்ததால் சிரஞ்சீவியை அங்கு கிடந்த பழைய சேலையால்  வாய், மூக்கை பொத்தி கொலை செய்து சடலத்தை அங்கேயே போட்டு விட்டு வந்ததாகக் கூறினான். இதையடுத்து, போலீஸார் பிரதீப்பைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.