கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இருபெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டணியின்புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டத்திற்கான மாவட்ட ஆயத்த மாநாடு ஆகிய இருபெரும் விழா கரூரில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவர் பெ. காளிதாஸ் தலைமை வகித்தார்.
புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்னை குறித்து முன்னாள் மாநிலத் தலைவரும், எஸ்.டி.எப்.ஐ. பொதுக்குழு உறுப்பினருமாகிய ச. மோசஸ் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலர் ஹேமலதா குத்துவிளக்கேற்றி தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பிச்சுமணி இயக்கக் கொடியேற்றி வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, கிளை நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டச் செயலர் ஜ. ஜெயராஜ் வரவரேற்றார். மாவட்டப் பொருளாளர் கனகராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








