கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலைவிதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலைவிதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து பேசியது: சாலை விதிகளை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.  18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டுனர் உரிமம் பெற்று  வாகனம் ஓட்ட வேண்டும். 
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.   இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் இனி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கடைப்பிடிப்பது நமது கடமை.  பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது என்றார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு சாலை விதிகளைக் கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.