கரூர் மாவட்டம் புகழூர் காகித ஆலையில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இதில் டி.என்.பி.எல். ஆற்றல் பாதுகாப்புத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன.
இதில், டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர். இதையடுத்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் வா.மு.அய்யப்பன் தலைமை வகித்தார். இதில் டிஎன்பிஎல் ஆலையின் அதிகாரிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







