ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பசுமையைக் காக்க வலியுறுத்தி பிரதமர், ஐ.நா செயலருக்கு கரூர் பள்ளி மாணவி கடிதம்

பசுமையைக் காக்க வலியுறுத்தி விதைப்பந்துக்கள் தூவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி மற்றும்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பசுமையைக் காக்க வலியுறுத்தி விதைப்பந்துக்கள் தூவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி மற்றும் ஐ.நா. செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார் கரூர் பள்ளி மாணவியும், சமூக ஆர்வலருமான ரக்ஷனா.
பூமி வெப்பயமாதலைத் தடுக்கும் வகையில் கரூர் ராமேசுவரப்பட்டியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி ரக்ஷனா, உலகம் முழுவதும் பசுமையை உருவாக்கும் வகையில் விமானத்தின் மூலம் விதைப்பந்துகளை தூவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா.செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் நாடு முழுவதும் மரங்களை உருவாக்கும் வகையில் விமானத்தில் விதைப்பந்து தூவுவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் இருநாட்கள் தியானம் மேற்கொண்டார். 
தொடர்ந்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், செவ்வாய்க்கிழமை விதைப்பந்துகளை தூவ நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பிரதமருக்கும், ஐ.நா.செயலருக்கும் கடிதம் அனுப்பினார். 
இதுதொடர்பாக மாணவி கூறுகையில், 2011 முதல் 2018 வரை பூமி வெப்பமயமாதலைத் தடுக்க இயற்கையை அழிக்கக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வேண்டும், உலகம் முழுவதும் 2400 கோடி விதைப்பந்துகளை வனங்கள், தரிசு நிலங்களில் விதைப்பதன் மூலம் பசுமையை உருவாக்க முடியும். வெப்பமயமாதலை தடுக்கலாம். மேலும் இயற்கை சீற்றங்களான சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றையும் இதன் மூலம் தடுக்க முடியும். இப்போது அனுப்பும் கடிதங்களுக்கு நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.