/

பேருந்து மோதி இளைஞர் சாவு

கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:29 am IST

கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகிலுள்ள குமாரவாடியைச் சேர்ந்த கருப்பையா மகன் பிரதீப் (24).   ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்டம், மாயனூர் அருகிலுள்ள கிளிஞ்சநத்தத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பிரதீப் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து,   கோவை மாவட்டம், போத்தனூரைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமாரை(42)  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.