5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கோயில் தீ விபத்து: சிபிசிஐடி விசாரணை தேவை: அர்ஜுன் சம்பத் பேட்டி

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:01 am

DIN

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
கரூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: இக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பக்தர்கள், இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் பழங்காலச் சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் அழிந்துவிட்டன. இந்த சம்பவத்துக்கு முக்கியக் காரணம் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியம்தான்.  இந்த விபத்து  ஏதோ சதி போலத் தோன்றுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து வரும் புதன்கிழமை மீனாட்சியம்மன் கோயில் முன் இந்துமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற மத்திய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெண்களைக் கொச்சைப்படுத்தும் பிப்.14-ல் ஆபாச சுவரொட்டிகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதே நாளில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுவிக்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டோரை விடுவிக்கக் கூடாது. ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரைப் போல சுறுசுறுப்பாக இருக்கும். அவர் நிச்சயம் தமிழக முதல்வராவார். அவருக்கு தார்மிக ஆதரவு தெரிவிப்போம்.  இன்றைய அரசியலில் உள்ள வெற்றிடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்றார் அவர்.  பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.