சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக கரூரில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் புதன்கிழமை கல்லூரி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:43 am

DIN

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக கரூரில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் புதன்கிழமை கல்லூரி நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவில் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வினை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று(21-ம்தேதி)முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். 
இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கல்லலூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் ந.சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், இணைச்செயலாளர் பி.ஜூடஸ்மேரி, பொருளாளர் சி.பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.