வேலாயுதம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்றிருந்த இரு பெண்களிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சரஸ்வதி (56). இவர், சனிக்கிழமை இரவு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல புன்னம்சத்திரம் ஓலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி சரஸ்வதி (60). இவர் வீட்டின் முன்பு சனிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

