கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மேட்டூரில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்

Updated On :23 ஜூலை 2018, 8:37 am IST

மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணியில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது ஞாயிற்றுக்கிழமை (22-ம்தேதி) இரவு 8.30 மணி முதல் 30,000 கன அடியாகவும்,  திங்கள்கிழமை முதல் 50,000 கன அடியாகவும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்ட காவிரி ஆற்றின் கரையோர ப்பகுதிகளிலும், வெள்ள நீர் எளிதாக புகுவதற்காகன வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். 
மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றில் இறங்கி குளிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களும், சிறியவர்களும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு தண்டாரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் தகவல்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.