கரூரில் மதிமுக சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கபினி கேகே.சிதம்பரம் தலைமை வகித்தார். மாணவர் அணி துணை அமைப்பாளர் பி.ஆர். பாஸ்கரன் வரவேற்றார்.
இதில் மாநில இளைஞரணி துணைச்செயலர் ஆசை சிவா, மாவட்ட துணைச் செயலர் வி.பி. கேசவன், நகரச் செயலர் கேஆர். சண்முகம், முன்னாள் வேலாயுதம்பாளையம் சேர்மன் நாச்சிமுத்து, மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆர். மனோகரன், எஸ். பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பெரியார்-அண்ணா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர் இரா. காமராசு, மாநில மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பால. சசிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில் முதல் பரிசை கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் மகேஸ்வரன் பெற்றார். இவருக்கு ரூ. 6,000 பரிசு மற்றும் கேடயமும், இரண்டாமிடம் பிடித்த அன்னை கல்லூரி மாணவி அனுசுயாவுக்கு ரூ.4,000 பரிசு மற்றும் கேடயமும், மூன்றாமிடம் பிடித்த அரசு கலைக்கல்லூரி மாணவர் பாலமுருகனுக்கு ரூ.2,000 பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை மாவட்டச் செயலர் கபினி கே.கே. சிதம்பரம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


