இனுங்கூர் விதைப் பண்ணையில் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகை
கரூர் மாவட்டம், இனுங்கூர் விதைப் பண்ணையில் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


கரூர் மாவட்டம், இனுங்கூர் விதைப் பண்ணையில் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூரில் வேளாண் துறைக்குச் சொந்தமான விதைப் பண்ணைக் கூடம் செயல்படுகிறது.
இங்கு பணியாற்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டதாகவும், விதைப்பண்ணையில் நீண்டகாலமாக வேலை பார்த்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல், தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வேலை வழங்குவதாகக் கூறி கடந்த 22 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், விதைப் பண்ணையில் அதே நிலைமை தொடர்ந்து நீடிப்பதாகக் கூறி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமையில் தண்ணீர்பள்ளியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
வேளாண் துறையின் மாவட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...