தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

எல்ஐசி ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மற்றும் குளித்தலையில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :29 மார்ச் 2018, 1:29 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மற்றும் குளித்தலையில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு மணிநேரம் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வாரத்தின் வேலைநாட்கள் 5 என அறிவிக்க வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.  
புதிய பணி நியமனத்தை  உடனடியாக நடத்திட வேண்டும், பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை ஆகிய இடங்களில் புதன்கிழமை எல்ஐசி ஊழியர்கள் பிற்பகல் 12 மணிமுதல் 1 மணி வரை பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலை அரசு மருத்துவமனை முன் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் 1-இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கிளை-1 இன் தலைவர் ஓ.பி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தஞ்சைக்கோட்ட துணைத்தலைவர் வி.கணேசன் சிறப்புரையாற்றினார். 
முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் எஸ்.சுப்ரமணியன், எஸ். உலகப்பிள்ளை மற்றும் இரண்டாம் நிலை ஊழியர் சங்கத்தின் டிஎஸ்.ராஜன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 
இதில், காப்பீட்டுக்கழக உறுப்பினர்கள் மணி, சடகோபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக  ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். இதேபோல கரூர் கிளை-2 இல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைச் செயலாளர் சிவராமன் தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல குளித்தலை கிளையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.