மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

குளித்தலையில்  அய்யாக்கண்ணு குழுவினருடன் பாஜகவினர் வாக்குவாதம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்த விவசாயி அய்யாக்கண்ணுவுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Updated On :29 மார்ச் 2018, 1:41 am

கரூர் மாவட்டம், குளித்தலையில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்த விவசாயி அய்யாக்கண்ணுவுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் இணைந்து மரபணு மாற்றப்பட்ட  விதைகளை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் மாவட்ட  ஆட்சியர்களைச் சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை அளித்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி கன்னியாகுமரியில்  விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கிய இந்தக் குழுவினர் 10 ஆவது மாவட்டமாக கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
குளித்தலை காவிரி ஆற்றுப்பாலம் பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை அய்யாக்கண்ணு குழுவினர் 
வழங்கினர். பின்னர் குளித்தலை பெரியபாலம் பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கச் சென்றபோது, அங்கு வந்த பாஜக நகரத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றியத் தலைவர் வீரமணி, ஒன்றிய இளைஞரணித் தலைவர் குமரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அய்யாக்கண்ணுவிடம் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.