கரூர், மே 14: கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மண்மங்கலம், கடம்பங்குறிச்சி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிகளுக்கு காவிரி ஆற்றில் புதிதாக கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் ஊராட்சி ஒன்றியம், புன்செய் கடம்பங்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றின் மையப் பகுதியில் கிணறு அமையவுள்ள பகுதியினை திங்கள்கிழமை ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர் மேலும் கூறியது:
கரூர் ஊராட்சி ஒன்றியம், புன்செய் கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிகளுக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிணறு மேடான பகுதியில் அமைந்துள்ளதால் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய கடம்பங்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்கும்வகையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும், கரூர் நகராட்சிக்காக கட்டளை பகுதியில் அமைந்துள்ள கிணற்றின் நீரில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளதால் தண்ணீர் லேசான மஞ்சள் நிறமாக உள்ளது. இதேபோல், கரூர், இனாம்கரூர், தாந்தோணி ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது.
இந்நீரை மத்திய நீர்வள பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வறிக்கை வந்த பின் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மகாத்மா காந்தி நகர் ஆதி அபார்ட்மெண்ட் சாலையை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.50 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் எஸ்.திருவிகா, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாயக்கழிவை தடுக்க நடவடிக்கை
நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக்கழிவால் கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

