தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழ

News image
Updated On :14 மே 2018, 10:48 pm

DIN

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 12) காலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்குச் சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோயிலில் மாலை 5 மணிக்குமேல் மஹா கணபதி வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, மிருத்சங் கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷô பந்தனம், கடம், யாக சாலை, பிரவேசம், துவார பூஜை, வேதிகார்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் மங்கள இசையுடன் 4 ஆம் கால யாக பூஜையும், யாக சாலையில் இருந்து ஆலய பிரவேசம், 8 மணிக்கு மேல் மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர்ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.