கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் த.அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 223 மனுக்கள் பெற்றார். மேலும், கொடிநாள் நிதி சேகரிப்பில் இலக்கை விட கூடுதலாக ரூ.1 லட்சம் சேகரித்த பள்ளப்பட்டி செயல் அலுவலர் உமா ராணியை ஆட்சியர் பாராட்டினார்.
கூட்டத்தின்போது, பல்வேறு தரப்பினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
குடிநீர் வசதி கேட்டு மனு:
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நஞ்சைகாளக்குறிச்சி கிராம மக்கள், எங்கள் பகுதியில் அமராவதி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் விநியோகித்து வந்தனர்.
தற்போது ஆழ்குழாய் கிணறு பழுதானதால் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள சாலப்பாளையம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.
எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இடத்தகராறை தீர்க்கக்கோரி மூதாட்டி மனு: குளித்தலை வட்டம் கே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆயிப்பொண்ணு(70) என்ற மூதாட்டி ஆட்சியரிடம் அளித்த மனுவில், நாங்கள் கே.பேட்டை கிராமத்தில் அரசு தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட உள்ள இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சின்னதுரை தனது இடம் எனக் கூறி இடையூறு செய்கிறார். எனவே, ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பெட்டிக்கடை நடத்த அனுமதிகோரி மனு: கரூர் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் அரசிடம் இருந்து உதவியாகப் பெற்ற பெட்டிக்கடை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்துவருகிறோம். எங்கள் கடைக்கு பின்புறம் நகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டுள்ளதால், எங்களைக் காலி செய்யுமாறு கூறிவிட்டனர்.
நாங்கள் கடை வைத்து பிழைப்பு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் சக்திவேல் மற்றும் லட்சுமணன் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர் தனி துணை ஆட்சியர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

