/

நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5-இல் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர், வரும் ஜூலை 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி

Updated On :21 மே 2018, 8:09 pm

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக முகநூலில் கருத்து தெரிவித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர், வரும் ஜூலை 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ். வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகக் கருத்து கூறியதாக, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி இந்திய குடியரசுக் கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கடந்த ஏப்.23-இல் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதி சுப்பையா முன் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா வரும் ஜூலை 5 ஆம் தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.