மாரியம்மன் கோயில் கம்பத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீர் ஊற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மழை(மாரி) தெய்வமாகவும், கரூர் மாவட்ட மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 13 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. கோயில் முன்பு நடப்பட்ட கம்பம் மாரியம்மனின் கணவரான சமதட்ஷினி முனிவராகப் பாவிக்கப்படுகிறார். அவர் தனது மனைவியான மாரியம்மன் மீது கொண்ட கோபத்தை தணிக்கும் வகையில், பக்தர்கள் நாள்தோறும் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபடுவதாக கோயில் வரலாறு கூறுகிறது.
இதையடுத்து கோயில் முன் முக்கிளை கொண்ட கம்பம் நடப்பட்ட நாள் முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வருகிறன்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மாரியம்மன் கோயில் முன்பு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து கோயிலில் சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதியும், வரும் 30 ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி, ஜூன் 7 ஆம் தேதி பஞ்சப் பிரகாரம், 8 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ஆம் தேதி ஊஞ்சல் உற்ஸவம், 10 ஆம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கே.முத்துக்குமார் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

