கரூரில் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பல் பரிசோதனை, ரத்த தானம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூரில் எம்பிளாயிஸ் கார்னர் தன்னார்வ அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பல் பரிசோதனை, ரத்த தானம் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை தன்னார்வ அமைப்பின் இயக்குநர் முகமது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமை பொது மருத்துவர் பக்தவச்சலம் தொடக்கி வைத்தார்.
இதில் கரூர் வேலன், என்பி மருத்துவமனைகளின் மருத்துவர்கள் குழு சார்பில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, பல் மருத்துவம், பொதுமருத்துவம், ரத்த வகை கண்டறிதல், சர்க்கரை நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் 50 பேர் ரத்த தானம் வழங்கினர். இதில் ரெயின்போ ரத்த வங்கியின் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

