வாழைத்தார் விலையேற்றம்:  கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி!

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கரூரில் வாழைத்தார் விலை அதிகரித்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Published On :

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கரூரில் வாழைத்தார் விலை அதிகரித்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கரூர் காமராஜர் மார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டிக்கு திருச்சி மாவட்டம் தொட்டியம், காட்டுப்புத்தூர், நாமக்கல் மாவட்டம் மோகனூர், பள்ளிபாளையம், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, மதுரை மாவட்டம் சோழவந்தான், தேனி மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம், நெரூர், வாங்கல், குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகளால் வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரள வெள்ளப்பெருக்கால் கரூரில் இருந்து வாழைக்காய் அனுப்பி வைக்கும் பணி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் விநாயகர் சதூர்த்தியையொட்டி கோயில்கள், வீடுகளில் நடைபெறும் சிறப்பு பூஜைக்காக கரூர் வாழைக்காய் மண்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஏராளமான வியாபாரிகள் போட்டிபோட்டு வாழைத்தார்களை வாங்கிச் சென்றனர்.  இதனால் கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற பூவன்தார் ரூ.500-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட ரஸ்தாளி ரூ.550-க்கும், ரூ.350-க்கு விற்ற மொந்தன் ரூ.500-க்கும், ரூ.200-க்கு விற்பனையான மோரீஸ் ரூ.350-க்கும் விற்கப்பட்டது. வாழைத்தார் விலை திடீரென உயர்ந்ததால் ஏலத்திற்கு வாழைத்தார் கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.