திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம்

கரூர் அருகே காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:49 am IST

கரூர் அருகே காங்கிரஸ் சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில்  ஷலோ பஞ்சாயத்து என்னும் கிராமத்தை தேடி திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிராமங்களில் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தின் முதல் ஷலோ பஞ்சாயத்து கூட்டம் கரூர் அருகே உள்ள சோமூரில் சனிக்கிழமை இரவு நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். முன்னாள் கரூர் வட்டாரத் தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார். 
இதில் தமிழக இளைஞர் காங். தலைவர் ஹசன்மவுலானா, தமிழக இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஷெமி மேத்யூ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.  நிகழ்ச்சியில் அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவித்தனர். அப்போது ஹசன்மவுலானா, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தந்தது யார்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் காங்கிரஸ் ஆட்சியில் எனப் பதிலளித்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு ஒரு வங்கி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தனர். முன்னதாக ராகுல்காந்தியின் மக்களவை உரை, பொதுக்கூட்ட பேச்சுகள் ஒளிபரப்பப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சின்னையன்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெயபிரகாஷ், சுரேகா பாலச்சந்தர், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.