நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மக்களவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்வு செய்யும் பணி தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்வு செய்வதற்காக

Updated On :23 ஜனவரி 2019, 7:17 am IST

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்வு செய்வதற்காக  தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன்  செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் த. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதிக்குள்பட்ட கரூர், அரவக்குறிச்சி,  கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்குத் தகுந்த அம்சங்களுடன் கூடிய வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்வு செய்யும்பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியை   வாக்கு எண்ணும் மையமாக அமைக்க தேவையான பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, விரிவான அறிக்கை   தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பப்பட  உள்ளது.
 தலைமைத் தேர்தல் ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன், வாக்கு எண்ணும் மையமாக எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி குறித்த அறிவிப்பு வெளியிப்பட்டு அது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில்,  ஆண் வாக்காளர்கள் 6,58,905 பேரும், பெண் வாக்காளர்கள் 6,84,741 பேரும், இதர வாக்காளர்கள் 58 பேரும் என மொத்தமாக 13,43,704 வாக்காளர்கள் உள்ளனர்.
 இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ம்தேதி வெளியிடப்பட உள்ளது என்றார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் பாரதி, சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் மீனாட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.