கரூர் மாவட்டத்தில் ஜன.26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் நியாயவிலைக்கடை பதிவேடுகள் தணிக்கை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் மற்றும் நியாய விலை கடைகள் செயல்பாட்டில் தூய்மையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில், நியாய விலை கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்குள்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி, ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக்
கூட்டங்களில், கிராமப்புற நியாய விலை அங்காடிகளில் பயன்படுத்தப்படும், அனைத்து பதிவேடுகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை, பயனாளிகளின் பட்டியல் சமுதாய தணிக்கைக்குழுவின் தணிக்கைக்கு வைக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். எனவே பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்






