கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் டிராவல்ஸ் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (40). ஓட்டுநரான இவருக்கு, சுதா என்ற மனைவியும், ஹரிணி (17), ஹரிவர்ஷனி (17) என இரண்டு மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் பிளஸ் டூ முடித்துள்ள நிலையில், ஈரோட்டில் உள்ள கல்லூரியில் மேல் படிப்பு படிக்க சேர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து சிரமப்பட்டு வந்த பாஸ்கரன் தனது மகள்களின் பட்ட படிப்பிற்கு பணம் தயார் செய்ய முடியாமல் தடுமாறி வந்துள்ளார்.
தனது உறவினர்களிடம் பணம் கேட்டும், வட்டிக்கு பணம் கேட்டும் கிடைக்கவில்லை. வைத்திருக்கும் ஒரு டிராவல்ஸ் வாகனத்தையும் விற்று விடலாம் என பாஸ்கர் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தை விற்க எப்சி மற்றும் இன்சூரன்ஸ் கட்ட முடியாத நிலையில் மனமுடைந்த பாஸ்கரன் நேற்று இரவு இறுதிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு கருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாந்தோன்றிமலை காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு மகள்களின் கல்லூரி சேர்க்கைக்கு பணம் தயார் செய்ய முடியாமல் தடுமாறிய நேரத்தில், கடனும் கிடைக்காமல் உறவுகளும் கைவிரித்ததால், மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...