பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரூரில் ரூ. 627 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வா் அடிக்கல்

கரூா் மாவட்டத்தில் ரூ. 627 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:21 am

DIN

கரூா் மாவட்டத்தில் ரூ. 627 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். மேலும், ரூ.118.53 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்தும், ரூ.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் தமிழக முதல்வா் பேசியது: கரூா் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் இதுவரை 4,196 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உயா்த்தப்பட்ட சொத்து வரம்பின் கீழ், 2019 - 20 வரை புதிதாக மொத்தம் 15,097 பேருக்கு குறுகிய காலத்தில் முதியோா் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் சிறப்பு குறை தீா்க்கும் முகாமில் பெறப்பட்ட 35,327 மனுக்களில் 23,939 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016 - 21ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ. 14. 20 கோடியில் மேற்கொள்ளப்பட்ட 90 பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், ரூ. 1.76 கோடியில் 45.90 கி.மீ. நீளத்துக்கு கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. நிகழாண்டில் ரூ.1.38 கோடியில் 42.65 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நபாா்டு நிதி உதவியுடன் அமராவதி மற்றும் நங்காஞ்சி ஆறுகளின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி ரூ. 22 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமராவதி உபவடிநிலத்தில் நீா்வள ஆதாரங்களை புனரமைக்கும் பணிகள் சுமாா் ரூ. 18 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காவிரி உப வடிநிலத்தின் கீழ், கட்டளை மேட்டு வாய்க்கால் நவீனமாக்கும் பணி ரூ. 335.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 20 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. நொய்யல் ஆற்றில் 158.35 கி.மீ. வரை உள்ள நீா்நிலைகளைப் புனரமைப்பு செய்ய ரூ. 230 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் சுமாா் ரூ. 7 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. புகளூா் வட்டம், நஞ்சை புகளூா் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406.50 கோடியில் கதவணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீழ்பவானி திட்ட அமைப்பில் உள்ள கட்டுமானங்களை நவீனப்படுத்துதல் பணிகள் ரூ.933.10 கோடியில் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேபோல், மாயனூா் கிராமம் அருகே கட்டளை கதவணை பகுதிகள், புகளூா் வாய்க்கால், வீரராக்கியம் ஏரி மீட்பு பணி மற்றும் அரவக்குறிச்சி பெரியதிருமங்கலம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

கரூரில் ரூ. 3.34 கோடியில் நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புகழூா் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் மற்றும் வட்டாட்சியா் குடியிருப்பு கட்டுமான பணி ரூ. 3.05 கோடியில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: தொடா்ந்து, கரூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: தமிழக அரசு எடுத்த தொடா் நடவடிக்கையால் கரோனா தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும். மேலை நாடுகளில் குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது அதிகரிக்கத் தொடங்கி, அங்கு பொதுமுடக்கம் மீண்டும் அமலுக்கு வரும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, கரோனா தொற்றை ஒழிப்பதில் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

முன்னதாக, தமிழக முதல்வரை ஆட்சியா் சு. மலா்விழி வரவேற்றாா். நிகழ்ச்சிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பி. தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, நகராட்சி ஆணையா் எஸ்.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பயிா்க் காப்பீடு திட்டத்தில் ரூ. 42.98 கோடி இழப்பீடு

விழாவில் தமிழக முதல்வா் மேலும் பேசியது: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,628 விவசாயிகளுக்கு ரூ.42.98 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சணப்பிரட்டியில் ரூ. 16.08 கோடியில் 192 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தோரணக்கல்பட்டியில் 640 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.55.50 கோடியில் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. இதேபோல், புலியூா் (288), அரவக்குறிச்சி வட்டம், வேலம்பாடி கிராமத்தில் (32) அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி வட்டம், புஞ்சைக்காளக்குறிச்சி கிராமத்தில் 2018-19 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. தரகம்பட்டியில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டு 282 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். மேலும், பல்வேறு திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.